47. அருள்மிகு ஸ்ரீநிவாசன் கோயில்
மூலவர் ஸ்ரீநிவாசன்
உத்ஸவர் மாயக்கூத்தன்
தாயார் அலமேலு மங்கை, குளந்தைவல்லி
திருக்கோலம் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் பெருங்குளம்
விமானம் ஆனந்த நிலைய விமானம்
மங்களாசாசனம் நம்மாழ்வார்
இருப்பிடம் திருக்குளந்தை, தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'பெருங்குளம்' என்று அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Tirukulandai Tirukulandaiமுன்னொரு காலத்தில் வேதசாரன் என்னும் அந்தணன் தனது மனைவி குமுதவல்லியுடன் இங்குள்ள பொய்கையில் நீராடி, புத்திரப்பேறு வேண்டி மகாவிஷ்ணுவை வழிபட்டு வந்தான். பகவான் அருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு 'கமலாவதி' என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். மணப்பருவம் அடைந்ததும், எம்பெருமானையே மணப்பேன் என்று கூறி, கடுமையாக தவம் புரிந்தாள். மகாவிஷ்ணு ப்ரத்யக்ஷமாகி அவளை விவாஹம் செய்துக் கொண்டார். பாலிகை தவம் செய்ததால் இந்த ஸ்தலம் 'பாலிகைவனம்' என்று அழைக்கப்படுவதாகவும் புராண வரலாறு கூறுகிறது.

Tirukulandaiமூலவர் ஸ்ரீநிவாஸன் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் மாயக்கூத்தன். அலமேலு மங்கை, குளந்தைவல்லி என்று இரண்டு உபய நாச்சியார்கள் உள்ளனர். பிரகஸ்பதிக்கு பகவான் ப்ரத்யக்ஷம்.

இந்த ஸ்தலத்தில் அச்மஸாரன் என்னும் அசுரன் கொடுமை செய்ததால், பகவான் அவனுடன் மாயாயுத்தம் செய்து அவனை ஸம்ஹரித்தார். அதனால் 'மாயக்கூத்தன்' என்று அழைக்கப்படுகிறார். ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்று.

நம்மாழ்வார் 1 பாசுரம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com